செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 62 அடியாக சரிவு

Published On 2018-01-02 12:45 GMT   |   Update On 2018-01-02 12:45 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நேற்று 63.73 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 62.62 அடி ஆக குறைந்தது.
மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடிக்கு மேல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நேற்று 127 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு மிக குறைந்த அளவில் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடிக்கு மேல் சரிந்து வருகிறது.

நேற்று 63.73 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி சரிந்து 62.62 அடி ஆக குறைந்தது.
Tags:    

Similar News