செய்திகள்

மிலாதுநபி விடுமுறை காரணமாக அண்ணா பல்கலை. தேர்வு தேதி மாற்றம்

Published On 2017-11-23 16:14 GMT   |   Update On 2017-11-23 16:15 GMT
மிலாதுநபி விடுமுறை மாற்றப்பட்டதன் காரணமாக அன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மிலாதுநபி விடுமுறை மாற்றப்பட்டதன் காரணமாக அன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட இருந்த மிலாதுநபி, அரசு தலைமை ஹாஜியின் கோரிக்கை காரணமாக டிசம்பர் 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், 2-ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News