செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 967 கன அடியாக சரிவு

Published On 2017-11-23 10:31 GMT   |   Update On 2017-11-23 10:31 GMT
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்துள்ளது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிந்துள்ளது.

நேற்று 1,037 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 967 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து 7,900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து 960 கன அடியாக இருப்பதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கி உள்ளது.

நேற்று 80.69 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 80.08 கன அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தாலோ? அல்லது கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறந்து விட்டாலோ தான் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News