செய்திகள்

திண்டுக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-20 11:38 GMT   |   Update On 2017-11-20 11:38 GMT
திண்டுக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், நவ. 20-

திண்டுக்கல்லில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பசும்பால் 1 லிட்டருக்கு ரூ.35 ஆகவும், எருமைப்பால் 1 லிட்டர் ரூ.45 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் மாட்டுத் தீவனம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். ஆவின் சங்கங்களுக்கு பால் கிரையத் தொகைக்கு பதிலாக பட்டாசு கொடுத்து ஏமாற்றும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க திண்டுக்கல் மாவட்டம் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முகமது அலி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் சடமாயன், தங்கவேல், முனியப்பன், ராஜூ, ராஜரத்தினம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News