செய்திகள்

பீ.பி.குளம் வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணி: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

Published On 2017-11-13 10:04 GMT   |   Update On 2017-11-13 10:04 GMT
மதுரை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணியாக பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் இன்று ஆய்வு பணி நடைபெற்றது.

மதுரை:

மதுரை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணியாக பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் இன்று ஆய்வு பணி நடைபெற்றது.

பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோடு ரத்தினசாமி நாடார் ரோடு சந்திப்பில் உள்ள வாய்க்காலை சுத்தப்படுத்தும் பணியை கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். வாய்க்காலில் இருந்து அள்ளப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.

வாய்க்காலுக்கு வடபுறம் பகுதியில் வீடு வீடாக சென்று சிமெண்ட், நீல நிற டிரம், சின்டெக்ஸ் தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த குடிநீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு செய்த சிமெண்ட் தொட்டியில் புழு இருப்பதை கண்டறிந்து தொட்டியினை அகற்ற உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி நகர்நல அலுவலர் பார்த்திப்பன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற் பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News