செய்திகள்

முதியோர் உதவி தொகையை ரூ.100 உயர்த்த நடவடிக்கை: நாராயணசாமி அறிவிப்பு

Published On 2017-10-03 16:31 GMT   |   Update On 2017-10-03 16:31 GMT
முதியோர் உதவி தொகையை ரூ.100 உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின விழாவிற்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நிதிநிலைக்கு ஏற்ப புதுவையில் ரூ.100 முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு தேடி முதியோர் உதவித்தொகை வழங்குவதில் சில குழப்பங்கள் உள்ளது. அதை சரிசெய்து மீண்டும் அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அமைப்பு தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மாவட்ட அளவிலான தலைவர் தேர்தல் முடிந்து விட்டது.

அடுத்து தேசிய அளவிலான தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல் தலைவராக வரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அவரை நாங்கள் ஏகமனதாக தேர்ந்தெடுப்போம். தீபாவளி பண்டிகைக்கு பிறகு ராகுல்காந்தி தலைவர் பொறுப்பை ஏற்பார்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News