செய்திகள்

புதுச்சேரியில் 770 மருத்துவ மாணவர்களை வெளியேற்ற வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு

Published On 2017-09-13 11:26 GMT   |   Update On 2017-09-13 11:26 GMT
புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 770 மருத்துவ மாணவர்களை உடனடியாக வெளியேற்றும்படி இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் 2016-17ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிரப்புவதில் விதிமீறல்கள் நடைபெற்றது. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி பெறாமலும், உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறியும் முறைகேடாக மாணவர்களை சேர்த்ததால் அவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாக உள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

மாநில அரசின் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறவில்லை என்றும், நிர்வாக ஒதுக்கீட்டில் தவறுதலாக மாணவர்களை சேர்த்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு தெரிவித்தது.

இது தொடர்பான விசாரணை அறிக்கை இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதுசேரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 770 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அவர்களை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 770 மாணவர்களும் ஓராண்டு படிப்பை முடித்த நிலையில், தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News