செய்திகள்

தடையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம்: ஐகோர்ட்டு கிளை அனுமதி

Published On 2017-09-11 05:44 GMT   |   Update On 2017-09-11 05:44 GMT
தடையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மதுரையை சேர்ந்த சேகரன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் ஆகியோர் வேலை நிறுத்தத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என கூறினர்.


மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை ஆகாது என சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் கூறி உள்ளது. அதன் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக கடந்த 7-ந்தேதி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தடையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News