செய்திகள்

தேசிய திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

Published On 2017-08-22 13:53 GMT   |   Update On 2017-08-22 13:53 GMT
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ஆர்வமுள்ள பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ஆர்வமுள்ள பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட த்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 2017 நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 21.08.2017 முதல் 01.09.2017 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தை ரூ.50- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.09.2017. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.

இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்கள்.
Tags:    

Similar News