செய்திகள்

போதுமான குற்றங்கள் நடந்துவிட்டது, தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்?: கமல் கேள்வி

Published On 2017-08-15 10:31 GMT   |   Update On 2017-08-15 10:34 GMT
ஊழலுக்காக ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்? என்று நடிகர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

நடிகர் கமல் ஹாசன் தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆளும் கட்சி குறித்தும் கடந்த சில மாதங்களாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழக அரசு மீதான அவரது விமர்சனக்களுக்கு அமைச்சர்களும் பதில் விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊழலுக்காக ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்? என்று நடிகர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்துள்ளதாவது:-

ஒரு முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதற்கு, அவரது ஆட்சியின் கீழ் நடைபெறும் ஒரு ஊழல் மற்றும் துர்பாக்கியமான விபத்து போதும் என்றால், ஏன் தமிழகத்தில் எந்த கட்சியும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. போதுமான குற்றங்கள் நடைபெற்று விட்டது.

என்னுடைய நோக்கம் ஒரு சிறந்த தமிழகமே. என்னுடைட கருத்தினை வலிமைப்படுத்த யாருக்கு தைரியம் உள்ளது?. திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் என் குரலுக்கு உதவும் கருவிகள். இந்தக் கட்சிகள் சரியில்லை என்றால் வேறு கட்சியை தேடுவோம்.

சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.
Tags:    

Similar News