செய்திகள்

பாகிஸ்தான் போரின் போது தன் சொந்த நகைகளை கொடுத்தவர் ஜெயலலிதா: சுதந்திர தின உரையில் முதல்வர் பேச்சு

Published On 2017-08-15 04:36 GMT   |   Update On 2017-08-15 04:36 GMT
பாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், கொடுத்தவர் ஜெயலலிதா என்று தனது சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிச்சாமி கூறினார்.
சென்னை:

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார்.  கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் தனது சுதந்திர தின உரையில் பேசியதாவது:-

சுதந்திரத்திற்காக அரும் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  

இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது. ரூ.1,114 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். பாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், கொடுத்தவர் ஜெயலலிதா.

இவ்வாறு பேசினார்.
Tags:    

Similar News