செய்திகள்

ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் மக்கள் நீதிமன்றம்

Published On 2017-07-08 10:02 GMT   |   Update On 2017-07-08 10:02 GMT
சென்னை ஐகோர்ட்டில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் ஐகோர்ட்டு நீதிபதி, மாவட்ட நீதிபதி கொண்ட அமர்வு முன்பு வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ளலாம்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டு சட்டப்பணிகள் குழு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமைகளில் ஐகோர்ட்டு நீதிபதி, மாவட்ட நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்பு மக்கள் நீதிமன்றம் கூடி வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

எனவே சாலை விபத்து இழப்பீடு மேல்முறையீட்டு வழக்குகளையும், மின்சார பயன்பாடு, வீட்டுவரி, தண்ணீர் வரி சம்பந்தமான ரிட் மனுக்கள்செக்மோசடி, ஜீவனாம்சம், நில அர்ஜித வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கு பெற்று வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ளலாம். இதில் முடிவு பெறும் வழக்குகளில் மேல்முறையீடு தவிர்க்கப்படுகிறது. இழப்பீட்டு தொகை மற்றும் இதர பிரச்சினைகளும் இரு தரப்பினர் சம்மத்துடன் தீர்க்கப்படுகிறது. எனவே இது சம்பந்தமாக வழக்காடுபவர்கள் அல்லது அவர்களது வக்கீல்களோ, ஐகோர்ட்டு கட்டிட வளாகத்தில் உள்ள உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News