செய்திகள்

டெல்லியில் ராகுல்காந்தியுடன் குஷ்பு சந்திப்பு

Published On 2017-04-25 08:00 GMT   |   Update On 2017-04-25 08:00 GMT
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டெல்லியில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.
சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டெல்லியில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் எடுத்து கூறினார். பின்னர் குஷ்பு கூறும் போது, “தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற வாய்ப்பு இல்லை. எனவே பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று கூறினார்.

Similar News