செய்திகள்

திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்

Published On 2017-04-12 12:13 GMT   |   Update On 2017-04-12 12:13 GMT
திருமங்கலம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வலையப்பட்டி கிராமத்தில் சபரிமலை முத்தாலம்மன் கோவில் 14-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தது.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 402 காளைகள் பங்கேற்றன. 204 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்கி வருகிறார்கள்.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு, தங்க காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் காயம் அடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 டாக்டர்கள் கொண்ட 40 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கால்நடை மருத்துவர்களும் தயாராக உள்ளனர். ஆம்புலன்சுகள் மற்றும் தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுகன்யா, தாசில்தார் மலர்விழி, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News