செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் காரைக்காலுக்கு கிடையாது: நாராயணசாமி தகவல்

Published On 2017-03-28 10:06 GMT   |   Update On 2017-03-28 10:06 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டம் காரைக்காலுக்கு கிடையாது என்று மத்திய மந்திரி கூறியதாக புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்த ஒப்பந்தம் செய்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து இன்று மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினேன். அப்போது அவர் இது சம்பந்தமான கோப்புகளை எனக்கு காட்டினார்.


அதில், காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதுவும் செயல் படுத்தப்படவில்லை என்ற தகவல் இருந்தது.

காரைக்காலில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக பகுதியில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதில் இருந்தது.

தமிழக மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறினேன். அதற்கு மந்திரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று என்னிடம் கூறினார்.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

Similar News