செய்திகள்

நாசரேத் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

Published On 2017-03-27 17:01 GMT   |   Update On 2017-03-27 17:01 GMT
நாசரேத் கடைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை கைது செய்தனர்.
நாசரேத்:

நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்திரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஆலோசனையின்படி சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற் பார்வையில் நாசரேத் காவல் சரக இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜெசுபாதம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் காவலர்கள் நாசரேத் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என அதிரடி ஆய்வு நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த  நாசரேத் பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் பணிபுரியும் சுப்பிரமணியன் (வயது 67), நாசரேத் கூட்டுறவு வங்கி அருகில் கடை வைத்திருந்த காபிரியேல் (60) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Similar News