செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

Published On 2017-03-26 16:29 GMT   |   Update On 2017-03-26 16:29 GMT
பரமத்திவேலூர் பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்ட கலெக்டரின்  உத்தரவின் பேரில் பேரூராட்சிகளில்  உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆலோசனையின்படி வேலூர் பேரூராட்சி சார்பில் வேலூர் சந்தைபேட்டை மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

இதில் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீட்டை சுற்றிலும் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையற்ற பொருட்கள், டீ கப், உரல், ஆகியவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்றப்பட்டது.

மக்களுக்கு சுகாதாரத்துடன் இருப்பது குறித்தும், டெங்கு வராமல் தடுப்பது குறித்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் பவுடர் போடப்பட்டது.

Similar News