செய்திகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 60 புகார்கள்

Published On 2017-03-25 10:50 GMT   |   Update On 2017-03-25 10:50 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு கடந்த 10 நாட்களில் கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்கள் வந்தன.

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செயல்படுகிறது.

தேர்தல் தொடர்பாக பொது மக்கள், அரசியல் கட்சிகள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இலவச டெலிபோன் எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 60 புகார்கள் வந்தன. இந்த புகார்கள் அனைத்தும் பணம் கொடுப்பது தொடர்பாகவோ விதி மீறல் குறித்து கூறப்படவில்லை.


தேர்தலில் பணம் வினியோகம் செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கி பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பிறகு நடத்திய வாகன சோதனையில் ரூ. 7 லட்சம் பிடிபட்டுள்ளது.

Similar News