செய்திகள்

பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.30 லட்சம் சேதம்

Published On 2017-03-20 08:22 GMT   |   Update On 2017-03-20 09:32 GMT
செங்குன்றத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகின.
செங்குன்றம்:

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜியாசிங். இவர் செங்குன்றம் பிரானர் லைன், கட்டபொம்மன் தெருவில் ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து அதில் வீட்டு உபயோக பொருட்களான பிளாஸ்டிக் குடம், நாற்காலி, வாளி, மற்றும் மெத்தைகளை மொத்தமாக வாங்கி வைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே இருந்து கரும் புகை வந்தது. தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் ஆகிய இடங்களில இருந்து 6 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீயணைப்பில் 50-க் கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆகின. குடோன் உள்ளே செல்ல 4 ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News