செய்திகள்

மீனவர் சுட்டுக்கொலை: விடுதலை வேங்கைகள் ரெயில் மறியல்

Published On 2017-03-08 13:12 GMT   |   Update On 2017-03-08 13:12 GMT
ராமேஸ்வரம் மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுவை மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் சார்பில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் ராமேஸ்வரம் பகுதி மீனவர் பிரிஜ்ஜோ கொல்லப்பட்டார்.

தமிழகம், புதுவையில் அரசியல் கட்சிகள், மீனவர் அமைப்புகள் மீனவர் படுகொலையை கண்டித்துள்ளனர்.

புதுவை மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதற்காக கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகில் அமைப்பாளர் மங்கையர்செல்வன் தலைமையில் நிர்வாகிகள் ஒன்று கூடினர்.

அங்கிருந்து ஊர்வலமாக கடலூர் ரெயில்வே கேட் நோக்கி சென்றனர். அங்கு ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 2 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் அரசியல் உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர். 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

Similar News