செய்திகள்

சிவகாசியில் பட்டாசு உரிமையாளர்கள் 1-ந்தேதி உண்ணாவிரதம்

Published On 2017-02-27 10:55 GMT   |   Update On 2017-02-27 10:56 GMT
பட்டாசு தொழிற்சாலை, கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சார்பில் வருகிற 1-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள், 800-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பட்டாசு கடையில் சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு உயிர் பலி நிகழ்ந்தது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விபத்தினை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் புதிய விதி முறைகளை பட்டாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய விதிமுறைகளை அமுல்படுத்தினால் பட்டாசு தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என பட்டாசு தொழிற்சாலை மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விதிமுறைகளை அமுல்படுத்தக்கூடாது என்று கோரி வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருப்பினும் இதுதொடர்பாக மத்திய- மாநில அரசுகள் எந்தவித உத்தரவாதமும் தராததை தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் வருகிற 1-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.

Similar News