செய்திகள்

புதுவையில் வறட்சி பகுதியை பார்வையிட மத்திய குழு 5-ந்தேதி வருகை: நாராயணசாமி

Published On 2017-02-27 09:15 GMT   |   Update On 2017-02-27 09:15 GMT
வறட்சியால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு வருகிற 5-ந்தேதி புதுச்சேரிக்கு வருகிறது. அவர்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுவை மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி நிவாரணம் வழங்குவது என்று சட்டசபையில் முடிவு செய்தோம். மேலும் டெல்லி சென்று மத்திய வேளாண்துறை மந்திரியை சந்தித்து வறட்சி நிவாரணம் வழங்கும்படியும் கேட்டோம்.

இத்துடன் மத்திய குழுவை அனுப்பி வறட்சி பகுதியை பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதன்படி மத்திய அரசு வருகிற 5-ந்தேதி மத்திய குழுவை புதுவைக்கு அனுப்பி வைக்கிறது.


அவர்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். பின்னர் இது சம்பந்தமான அறிக்கை மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்படும். அதைத்தொடர்ந்து மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்கும்.

அதற்கு முன்னதாகவே இடைக்காலமாக வறட்சி நிவாரண நிதியை வழங்குவதற்கு புதுவை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News