செய்திகள்

குரோம்பேட்டையில் மார்ச் 7-ந்தேதி போக்குவரத்து ஊதிய குழு பேச்சுவார்த்தை

Published On 2017-02-27 09:07 GMT   |   Update On 2017-02-27 09:07 GMT
போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மார்ச் 7-ந்தேதி குரோம்பேட்டையில் காலை 11 மணிக்கு நடக்கிறது.
சென்னை:-

தமிழ்நாட்டில் 1½ லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும்.

13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மார்ச் 7-ந்தேதி குரோம்பேட்டையில் காலை 11 மணிக்கு நடக்கிறது.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செயலாளர் சந்திரகாந்த் காம்ப்ளே மற்றும் அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், 51 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன.

அண்ணா தொழிற்சங்கம், எல்.பி.எப்., பாட்டாளி, மறுமலர்ச்சி, ஐ.என்.டி.யு.சி., கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள், விடுதலை சிறுத்தை தொழிலாளர் சங்கம் போன்றவை பங்கேற்கின்றன.


50 சதவீத ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்தல், போக்குவரத்து துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குதல், அவைருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது பேசுகிறார்கள்.

இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்றனர்.

Similar News