செய்திகள்

ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஜெயசந்திரன் ஓய்வு

Published On 2017-02-24 10:20 GMT   |   Update On 2017-02-24 10:20 GMT
நீதிபதி ஜெயசந்திரன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்தது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றியவர் எம்.ஜெயசந்திரன். இவர், இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு இன்று காலையில், வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில், ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் மணிக்குமார், நாகமுத்து, சசிதரன், ராஜீவ்சக்தேர் உட்பட அனைத்து நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாநில தலைமை குற்றவியல் வக்கீல்கள், அரசு வக்கீல்கள், பிளீடர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், இந்த வழியனுப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் தனிப்பட்ட வேலைக்கு வெளியில் சென்று இருந்ததால், ஐகோர்ட்டுக்கு கால தாமதமாக வந்தார்.

இந்த விழாவில், நீதிபதி எம்.ஜெயசந்திரனை வாழ்த்தி, அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி வாழ்த்தி பேசினார். இதற்கு நன்றி தெரிவித்து நீதிபதி எம்.ஜெயசந்திரன் பேசினார். நீதிபதி ஜெயசந்திரன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக குறைந்தது. காலிப்பணியிடங்கள், 19 ஆக உயர்ந்தது.

Similar News