செய்திகள்

சட்டசபையில் நடந்தது என்ன? செயலரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர்

Published On 2017-02-19 16:45 GMT   |   Update On 2017-02-19 16:45 GMT
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முடிவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று உடனடியாக ஸ்டாலின் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அவருடன் அவைத் தலைவர் மதுசூதனன், மைத்ரேயன் எம்.பி. செம்மலை எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவம் குறித்து கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் விளக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News