செய்திகள்

2 கப்பல் மாலுமிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு

Published On 2017-02-03 07:06 GMT   |   Update On 2017-02-03 07:06 GMT
எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதிய விபத்து தொடர்பாக 5 பிரிவுகளில் 2 கப்பல் மாலுமிகள் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவொற்றியூர்:

எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதிய விபத்து குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதையடுத்து எண்ணூர் துறைமுக பொறுப்பு கழக பொது மேலாளர் குப்தா மீஞ்சூர் போலீசில் இரு கப்பல் மாலுமிகள் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் இரு கப்பல் நிறுவனங்கள் மீதும், அதன் மாலுமிகள் மீதும் மீஞ்சூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 280, 285, 336, 427, 431 ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அஜாக்கிரதையாக கப்பல் ஓட்டுதல், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், அஜாக்கிரதையாக செயல்படுதல், முறையான பாதையில் செல்லாமல் விபத்து ஏற்படுத்துதல், கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுதல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன.

Similar News