செய்திகள்

களியக்காவிளை அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி

Published On 2017-01-28 15:10 GMT   |   Update On 2017-01-28 15:10 GMT
களியக்காவிளை அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
களியக்காவிளை:

களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டைச் சேர்ந்தவர் சிசில். கேரளாவில் கட்டிடத் தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஆசிகா(வயது4).

இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எல். கே.ஜி. படித்து வந்தார். கடந்த 22-ந்தேதி ஆசிகாவுக்கு காய்ச்சல் வந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் ஆசிகாவிற்கு காய்ச்சல் குறைய வில்லை. காய்ச்சல் அதிகமானதால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிகா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆசிகா படித்து வந்த பள்ளியில் மாணவிகள் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆசிகாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் சுகாதார துறையினர் ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.

Similar News