செய்திகள்

கவர்னர் உரை: இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்

Published On 2017-01-23 10:12 GMT   |   Update On 2017-01-23 10:12 GMT
தமிழ்நாட்டின் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து இலவச மின்சாரம் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று சட்டசபையில் கவர்னர் கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை வலுப்படும். புதுமை நலத்திட்டமாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து வீட்டு இணைப்பு நுகர்வோருக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டமும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரையும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரையும் விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டமும், விவசாயத்திற்கும், குடிசை இணைப்புகளுக்கும் வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தடையற்ற, தரமான மின்சாரம் தமிழ்நாட்டில் அனைவருக்கும் தொடர்ந்து கிடைப்பதற்காக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிகளால், புதிய முதலீடுகளை ஈர்க்கவல்ல முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News