செய்திகள்

குடியரசு தின விழா: ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்

Published On 2017-01-22 05:01 GMT   |   Update On 2017-01-22 05:01 GMT
கவர்னர் வித்யாசாகர் ராவ் குடியரசு தினத்தன்று மும்பையில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதனால் சென்னையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.
சென்னை:

குடியரசு தினத்தன்று கவர்னர் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். ஆனால் இப்போது தமிழ்நாட்டுக்கு பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர்  ராவ் இருந்து வருகிறார். அவர் குடியரசு தினத்தன்று மும்பையில் தேசிய கொடி ஏற்றுகிறார்.

இதனால் சென்னையில் முதல்-அமைச்சர் ஓ.பன் னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.

வருகிற 26-ந்தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றுகிறார்.

அதைத் தொடர்ந்து நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பு மரியாதையையும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்கிறார்.

அலங்கார ஊர்தி அணி வகுப்பையும் பார்வையிடுகிறார். இதில் வீரதீர சாகசம் புரிந்த வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்குகிறார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இதில் பொதுமக்கள் பங்கேற்று பார்ப்பதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Similar News