செய்திகள்
வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டம் நடத்தும் மாணவர்கள்.

கோவில்பட்டியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டம்

Published On 2017-01-20 11:08 GMT   |   Update On 2017-01-20 11:08 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் 2 பேர் இன்று வயர்லெஸ் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சூர்யா, காளிப்பாண்டி ஆகிய இருவரும் இன்று காலை 9.45 மணியளவில் கோவில்பட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வயர்லெஸ் டவர் மீது ஏறினர். பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதனால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை டவரில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தும்வரை கீழே இறங்க மாட்டோம் என மாணவர்கள் கூறிவிட்டனர். மேலும் போலீசார் யாராவது டவரில் ஏறினால் நாங்கள் கீழே குதித்து விடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Similar News