செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று கடைகள் அடைப்பு

Published On 2017-01-20 09:58 GMT   |   Update On 2017-01-20 09:58 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஊட்டி அரசு கல்லூரி, குன்னூர் மற்றும் கூடலூரில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

ஊட்டி,கோத்தகிரி, கூடலூர், குன்னூர், பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ, கார், வேன்கள், மினி பஸ்கள், லாரிகள், ஓடவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

குன்னூர் பழைய லாரி நிலையம் அருகில் இன்று ஜல்லிக்கட்டு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Similar News