செய்திகள்

வில்லியனூர் லுர்துமாதா ஆலயத்தில் கவர்னர் கிரண்பேடி சிறப்பு பிரார்த்தனை

Published On 2016-12-25 11:13 GMT   |   Update On 2016-12-25 11:13 GMT
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வில்லியனூர் லுர்துமாதா ஆலயத்தில் கவர்னர் கிரண்பேடி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

புதுச்சேரி:

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று காலை கவர்னர் கிரண்பேடி அரியாங்குப்பம் தூயமரியன்னை ஆலயத்துக்கு சென்றார். அங்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் ஒதியம்பட்டில் உள்ள அட்டை தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு சென்றார். அங்கு தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து உலகில் பிரசித்தி பெற்ற தேவாலயத்தில் 2-வது திருத்தலமாக விளங்கும் வில்லியனூர் லுர்து மாதா ஆலயத்துக்கு கவர்னர் கிரண்பேடி சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். பின்னர் ஆலயத்தில் உள்ள திருகுளத்தை கவர்னர் சுற்றி வந்து வழிபட்டார்.

இதன் பின்னர் நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கத்தில் உள்ள நல்லூர் ஏரியை பார்வையிட்டார்.

Similar News