செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2016-12-23 11:12 GMT   |   Update On 2016-12-23 11:13 GMT
கடலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் (35). எம்.ஏ. பட்டதாரி. இவர் சென்னை பாலவாக்கம் அம்பேத்கர் தெருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பஸ் நிலையப் பகுதியைச் சேர்ந்த பிரபுமோகன்தாசிடம் அவரது மனைவி மற்றும் தம்பிக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.31 லட்சம் பெற்றுக் கொண்டார்.

ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், வேலை வாங்கித் தரவில்லை பணத்தை கேட்டபோது ரூ.7 லட்சம் மட்டும் வீரப்பன் திருப்பி கொடுத்தார். மீதி ரூ.24 லட்சம் பணத்தை திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயரிடம் பிரபுமோகன் தாஸ் புகார் செய்தார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வீரப்பனை கைது செய்தனர்.

பின்னர், வீரப்பன் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிபதி மும்தாஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் கிளை சிறையில் வீரப்பன் அடைக்கப்பட்டார்.

Similar News