செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி

Published On 2016-12-09 14:28 GMT   |   Update On 2016-12-10 05:01 GMT
ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5–ந்தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், 6–ந்தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்றைய தினம் இரவு அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அவருடைய சமாதியில் அஞ்சலி செலுத்தினர். மெரினா கடற்கரை பகுதியில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உருவப்படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, சினிவாசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். சசிகலா, இளவரசி குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.

Similar News