செய்திகள்

ஜெயலலிதா முழு உருவச்சிலையுடன் நினைவிடம் அமைக்க முடிவு

Published On 2016-12-07 07:11 GMT   |   Update On 2016-12-07 07:30 GMT
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரின் முழு உருவச்சிலையுடன் நினைவிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் எந்த ஒரு கட்டிடமும் கட்டக்கூடாது என்று கடற்கரை ஒழுங்குமுறை சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களை தமிழக அரசின் செய்தி துறை பராமரித்தாலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலையுடன் நினைவிடம் அமைக்கப்படும். 2017 பிப்ரவரி 24-ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சிலை வைக்கப்படும் என்றார்.

Similar News