செய்திகள்

அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டன் சென்றது ஜெயலலிதா உடல்

Published On 2016-12-05 21:22 GMT   |   Update On 2016-12-05 21:22 GMT
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை:

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவமனையில் ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்கள் உடன் சென்றது. ஆம்புலன்ஸ் உட்பட 8 வாகனங்கள் கன்வாயில் இடம்பெற்றிருந்தன.  

அவர்களுடன் அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் வாகனங்கள் பின் சென்றன. வழியின் இரு புறங்களில் போலீசார் நீண்ட வரிசையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சாலையின் இரு புறங்களிலும் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தனர். கூட்டம் அதிகமாக உள்ளதால் அங்குள்ளவர்களை போலீசார் கட்டுப்படுத்தி வருகின்றனர். 

Similar News