செய்திகள்

முசிறியில் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு பணம் கொடுக்க தாமதம் : 50-பேர் போலீசில் புகார்

Published On 2016-10-28 14:14 GMT   |   Update On 2016-10-28 14:14 GMT
முசிறி சிட்பண்டில் குறிப்பிட்ட நேரத்தில் ஏலசீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு பணம் தாராமல் காலதாமதம் செய்வதாக கூறி முசிறி காவல் நிலையத்தில் சுமார் 50-பேர் புகார் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முசிறி:

முசிறியில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று ஏலச்சீட்டு நடத்தி வருகிறது. இந்த ஏலசீட்டு திட்டத்தில் முசிறி, குளித்தலை, தா.பேட்டை, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பணம் கட்டியுள்ளனர். இந்தநிலையில் ஏல சீட்டில் சீட்டு ஏலம் எடுத்தவர்களுக்கு நிதி நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் பணம் தராமல் காலதாமதம் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முசிறி காவல் நிலையத்திற்கு வந்து தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை பெற்று தருமாறு புகார் அளித்தனர். அப்போது நிதிநிறுவனம் சார்பில் வசூல் செய்யும் ஊழியர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாதிக்கப்பட்டவர்களிடம் நிதிநிறுவன பணியாளர்களை அழைத்து வந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.             

Similar News