செய்திகள்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.5,300 ஊக்கத்தொகை

Published On 2016-10-25 21:46 GMT   |   Update On 2016-10-25 21:46 GMT
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ரூ.5,300 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
சென்னை:

108 அவசர கால சேவை நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

108 அவசர கால சேவையை ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. என்ற நிறுவனம், தமிழ்நாடு அரசோடு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இணைந்து செயல்பட்டு வருகிறது. 4,100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 108 அவசரகால சேவையில் தமிழகம் எங்கும் பணியாற்றி வருகின்றனர். 2014-ம் ஆண்டு முதல் தீபாவளியின் போது ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 2015-ல் ரூ.5,300 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு (2016) ரூ.5,300 இரண்டு வாரங்களுக்கு முன்பே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இது சராசரியாக ஒருவரின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் ஆகும்.

இருந்தபோதிலும் ஊழியர்களில் சிலர் அதிக ஊக்கத்தொகை வேண்டும் என கோரிக்கை விடுத்தும், தீபாவளியன்று வேலை நிறுத்தமும் அறிவித்துள்ளனர். இதையடுத்து தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வேலை நிறுத்தத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Similar News