செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் இல்லை: வழக்கம்போல் வழங்குவதாக அறிவிப்பு

Published On 2016-10-25 16:55 GMT   |   Update On 2016-10-25 16:56 GMT
அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படாது என்றும், 31-ம் தேதி வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இதுகுறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தீபாவளி இந்த மாதம் 29 ஆம் தேதி வருவதால், இந்த மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. அதனை பரிசீலனை செய்து, இந்த மாதத்திற்கான சம்பளத்தை 28 ஆம் தேதி வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வழக்கம்போல் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே ஊதியம் என அறிவிக்கப்பட்ட அரசாணை திரும்ப பெறப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எண் 277 செல்லாது என கருவூலகத்துறை வெளியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புபடி வழக்கம் போல் இம்மாதமும் 31-ம் தேதி அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News