செய்திகள்

மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-10-25 13:04 GMT   |   Update On 2016-10-25 13:04 GMT
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 50). இவரது மகள் பழனியம்மாள் (25). இவருக்கும், காவேரிப்பட்டணம் அருகே உள்ள எம்.சவுளூரைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்ற தொழிலாளிக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் மணிகண்டன் தனது பழனியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 19.08.2015 அன்று மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மணிகண்டன், அவர் தூங்கும் போது, தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்தார்.

இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி, மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.திருமகள் நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

Similar News