செய்திகள்

எலத்தூர்மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி 1,008 கலச யாகம்

Published On 2016-10-22 17:34 GMT   |   Update On 2016-10-22 17:34 GMT
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் மலை மீது உள்ள நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணியசாமி கோவிலில் 1,008 கலச யாகம் நடந்தது.
கலசபாக்கம்:

நிகழ்ச்சிக்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொருமாள்நகர் கே.ராஜன் முன்னிலை வகித்தார். கோவில் அருகில் பெரிய அளவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு 1,008 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், ஆயுஸ்ய ஹோமம் உள்பட 7 ஹோமங்கள் செய்யப்பட்டு பின்பு 1,008 கலசங்களை எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் எடுத்துக்கொண்டு மலையை சுற்றி கிரிவலமாக வந்தனர். பின்னர் மலை மீது உள்ள சுயம்பு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாகண்ணு, மாவட்ட துணை செயலாளர் என்.துரை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, போளூர் தினகரன், குட்டி அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News