செய்திகள்

அமித் ஷா-அருண் ஜெட்லி நாளை சென்னை வருகை: முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்கின்றனர்

Published On 2016-10-11 10:20 GMT   |   Update On 2016-10-11 10:20 GMT
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக டெல்லியில் இருந்து அமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் நாளை சென்னை வர உள்ளனர்.
சென்னை:

முதல்-அமைச்ர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்நானி மீண்டும் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார். இன்று 20-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழுவினரின் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள முதல்-அமைச்சரின் உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள் விசாரித்தவண்ணம் உள்னர்.

அவ்வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் நாளை டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர். அவர்கள், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளனர்.

அமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் நாளை பிற்பகல் சென்னை வந்து முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாகவும், இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த பயணத்திட்டமும் இல்லை என்றும் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Similar News