செய்திகள்

தமிழக அரசு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவை கொண்டு காவிரி டெல்டாவை ஆய்வு செய்ய வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

Published On 2016-09-28 04:51 GMT   |   Update On 2016-09-28 04:51 GMT
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து காவிரி டெல்டாவை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தஞ்சாவூர்:

இதுகுறித்து அவர் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனாலும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் 3 தினங்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது எந்த வகையிலும் தமிழக விவசாயிகளுக்கு பயனளிக்காது. ஏற்கனவே தண்ணீரை விடுவிக்க உச்சநீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடகம் குறித்து நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை.

தமிழக அரசு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து காவிரி டெல்டாவை ஆய்வு செய்து, உண்மை நிலையை பிரதமர் கூட்டவிருக்கும் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு உடன் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுகுழுவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News