செய்திகள்

புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன்: இந்த மாதம் முதல் அமல்-நாராயணசாமி அறிவிப்பு

Published On 2016-09-09 07:33 GMT   |   Update On 2016-09-09 07:33 GMT
புதுவை சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி புதுவை அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் (செப்டம்பர்) முதல் 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைகளின்படி சம்பளம் வழங்கப்படும். அவர்களுக்கான நிலுவை தொகையை வழங்க மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். அந்த நிதி கிடைத்தவுடன் நிலுவை தொகை வழங்கப்படும்.

பொதுத்துறை, தன்னாட்சி, கூட்டுறவு, வாரிய ஊழியர்களுக்கு 6-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அதே போல் தற்போது குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தபடும். உள்ளாட்சி ஊழியர்கள், அரசு உதவிபெறும் பள்ளி-கல்வி ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள் ஆகியோருக்கும் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Similar News