செய்திகள்

திருச்சி அருகே முத்தரையர் சிலை அவமதிப்பு: மறியல்-பதற்றம்

Published On 2016-09-07 09:13 GMT   |   Update On 2016-09-07 09:13 GMT
திருச்சி அருகே முத்தரையர் சிலை அவமதிககப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை உள்ளது. நேற்று இரவு இந்த சிலையை யாரோ மர்மநபர்கள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர்.

இன்று அதிகாலை வழக்கம்போல் அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் கடைகளை திறப்பதற்காக வந்தனர். அப்போது அங்கு முத்தரையர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை கடும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் தகவல் தெரிவித்தனர். அத்துடன் சிலை அவமதிப்பு சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் அங்கு ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் கீரம்பூர்-செங்காட்டு பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்த பலர் பெருமாள் மலை அடிவாரத்திலும் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த முசிறி டி.எஸ்.பி. அரசு, துறையூர் தாசில்தார் ரேணுகாதேவி, இன்ஸ்பெக்டர் மனோகரன், துணை தாசில்தார் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முத்தரையர் சிலையை அவமதித்தவர்களை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் கீரம்பூர், செங்காட்டுபட்டி, பெருமாள்மலை அடிவாரம், சிலோன் ஆபீஸ் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி.ஆர்.ஓ. ஜானகி சம்பவ இடத்தை பார்வையிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பிடுகு முத்தரையர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News