செய்திகள்

கவுண்டம்பாளையம் அருகே பாரம்பரிய உணவு திருவிழா

Published On 2016-08-06 16:39 GMT   |   Update On 2016-08-06 16:39 GMT
துடியலூரையடுத்த தொப்பம்பட்டி பிரிவில் பாரம்பரிய உணவுத் திருவிழா தொடங்கியது.

கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் துடியலூரையடுத்த தொப்பம்பட்டி பிரிவில் பாரம்பரிய உணவுத் திருவிழா தொடங்கியது.

இதன் தொடக்க விழாவிற்கு வந்திருந்தவர்களை பெ.நா.பாளையம் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்றார். கோவை மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி முன்னிலை வகித்து இத்திருவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வீரபாண்டி விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து பெ.நா.பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.பி.சந்திரகுமார், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொன்.தன்ராஜ், துடியலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்தோஷ் ஆகியோர் பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விளக்கினர்.

தொடர்ந்து உணவுப் பொருட்களின் கண்காட்சி தொடங்கியது. இதில் 20 மேற்பட்ட காட்சியரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய உணவான சாமை, சோளம், மக்காச்சோளம், தினை, வரகு, குதிரைவாலி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்டிருந்த உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Similar News