செய்திகள்

மஞ்சள்பரப்பு பகுதியில் பயிர்களை நாசப்படுத்தும் காட்டெருமைகள்

Published On 2016-06-30 12:01 GMT   |   Update On 2016-06-30 12:02 GMT
மஞ்சள்பரப்பு பகுதியில் காட்டெருமைகளின் அட்டகாசத்தினால் பயிர்கள் நாசமாகி விடுகின்றன.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தெடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக பழனிமலை பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் காப்பி பயிரிடுதல் பிரதானமாக உள்ளது.

காப்பிக்கு ஊடு பயிராக மலைவாழை, ஆரஞ்சு, பட்டர்புரூட், சவ்சவ், பீன்ஸ், பலா, ஏலம், எலு மிச்சை, ஜாதிகாய், பட்டை, மிளகு போன்ற இதர பயிர்களையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது எங்கு பார்த்தாலும் காட்டெருமைகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

பெரும்பாறை, தாண்டிக் குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், கும்பரையூர், வாழைகரி, வடகரைபாறை, ஊத்து, மங்களம்கொம்பு, கொங்கப்பட்டி, பெரியூர், மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பாச்சலூர் போன்ற கிராமங்களில் காட்டெருமைகளின் அட்டகாசத்தினால் பயிர்கள் நாசமாகி விடுகின்றன.

நேற்று முன்தினம் மஞ்சள்பரப்பு அருகே ஒரு தோட்டத்தில் காட்டெருமைகள் புகுந்து காப்பி, மிளகு, எலுமிச்சை போன்ற பயிர்களை வேரோடு சாய்த்தது. எனவே அந்த பகுதியில் சுற்றி வரும் காட்டெருமைகளை தோட்டத்திற்குள் வராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News