உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 126 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2022-08-08 09:31 GMT   |   Update On 2022-08-08 09:31 GMT
  • பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடந்தது.
  • மொத்தமாக கடந்த 2 ஆண்டில் 126 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 126 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடந்தது. இந்த பகுதிகளில் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆனைமலையில் குழந்தை திருமணங்கள் தற்போது நடப்பது இல்லை.

கடந்த ஆண்டு குழந்தை திருமணம் தொடர்பாக 145 புகார்கள் வந்தது. இதில் 98 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. 47 திருமணங்கள் நடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 64 புகார்கள் வந்தது. இதில் 28 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. 36 திருமணங்கள் நடந்தது. மொத்தமாக கடந்த 2 ஆண்டில் 126 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

குழந்தை திருமணங்கள் நடப்பது குறித்த தகவல்கள் காலதா மதமாக கிடைக்கிறது.பெரும்பாலும் திருமணம் நடந்த பிறகு தான் தகவல் வருகிறது. பெற்றோர் - குழந்தை திருமணங்களை ஆதரிக்க கூடாது. இதனால், பெண் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு பேராபத்தான கர்ப்பம், பேறுகால இறப்பு, எளிதில் தொற்றுநோய் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

மேலும் குழந்தை திருமணம் என்பது குற்றச்செயல். இதற்காக தனிச்சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் படி தண்டணை வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குழந்தை திருமணம் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக குழந்தை உதவி எண் 1098 யை தொடர்பு கொள்ள வேண்டும்.

அடுத்த சில ஆண்டுகளில் கோவை 5 மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லை என்ற நிலையை அடைய அனை வரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக, சமூக நலத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News