செய்திகள்

இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Published On 2018-08-22 22:12 GMT   |   Update On 2018-08-22 22:12 GMT
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. #ViswasamFirstLook #Ajith
அஜித் தற்போது `விஸ்வாசம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 



சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 3.40 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. #Viswasam #AjithKumar
Tags:    

Similar News