செய்திகள்
ஓமலூர் தொகுதி

ஓமலூர் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-04 13:20 GMT   |   Update On 2021-03-04 13:20 GMT
கடந்த இரண்டு முறை அதிமுக வெற்றி பெற்ற சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி ஓர் அலசல்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி விவசாயிகள், தொழிலாளர்கள் அதிகளவில் நிறைந்த பகுதியாகும். 2016-ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாமக, சுயேட்சை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2016 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில், மொத்த வாக்குப் பதிவு விகிதமானது ஓமலூர் ல் 66.98 என்ற விகிதத்தில் பதிவாகியிருந்தது. ஓமலூர் தொகுதியில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 85 ஆண்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 623 பெண்களும் 4 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 712 வாக்காளர்கள் உள்ளனர்.



ஒமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூக்கள் பயிரிடப்படுகிறது. குறிப்பாக தும்பி பாடி, கஞ்சநாயக்கன்பட்டி, காஞ்சேரி, பூசாரிபட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா, சாமந்தி, மல்லிக்கை உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு

இங்கு உற்பத்தியாகும் பூக்கள் ஐதராபாத், பெங்களூர்,டெல்லி போன்ற மாநிலங்களுக்கும், மதுரை, நாமக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பூக்கள் மலர்ந்து விட்டால் ஒரு நாளுக்குள் நிறம் மாறிவிடும் நிறம் மாறும் பூக்கள் அனைத்தும் வீணானவைகள் தான். இதனை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வருகிறது.



இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகும். மீதமுள்ள நாட்களில் உற்பத்தியாகும் பூக்களை விவசாயிகள் குப்பையில் எடுத்து கொட்டும் நிலை உள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நேரங்களில் தொழிற்சாலை இருந்தால் வீணாகும் பூக்களை தொழிற்சாலையில் கொடுத்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.



தமிழகத்திலேயே அதிக அளவில் ஓமலூரில்தான் கோரைப்பாய் தயாரிப்பு உள்ளது. குறிப்பாக ஓமலூரில் சிக்கணம்பட்டி, செம்மாண்டப்பட்டி, தாராபுரம், செம்மனூர், சின்ன திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் கோரைப்பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. கோரைப்பாய் தயாரிப்புக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இலவசமாக வழங்கப்பட்டால் கோரைப்பாயை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் மேட்டூர் அணையில் அதிகம் விலையும் கோரைகளை தண்ணீர் குறையும் போது இடைத்தரகர்களுக்கு வாங்கிப் பாதிக்கின்றனர். எனவே அரசு கோரைகளை கொள்முதல் செய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை நம்பி 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.



சரபங்கா ஆற்றை மீட்டு இதன் வழியாக காவிரி உபரி நீர் திட்டம் கொண்டு வர வேண்டும் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 70 சதவீதம் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கரும்பு, பூக்கள், மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

ஓமலூரில் உள்ள பல்வேறு ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் வறண்ட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டத்தின் மூலமாக சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால் இதன் மூலமாக பொட்டியபுரம் ஏரி, நாகலூர் ஏரி, செட்டிப்பட்டி ஏரி, மூங்கில்ஏரி, முத்துநாயக்கன்பட்டி ஏரி, பெரியார்பட்டி ஏரி, காமனேரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் என்றும் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 



இதன் மூலமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் சரபங்கா ஆற்றினை தூய்மைப்படுத்தி, நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சரபங்கா ஆற்றின் வழியாக காடையாம்பட்டி ஏரிகளுக்கு நீரை நிரப்ப வேண்டும் என்றும் கடந்த 35 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.

ஓமலூர் தொகுதியில் இதுவரை வெற்றி நிலவரம்




1977- சிவபெருமாள் (அ.தி.மு.க.)
1980- சிவபெருமாள் (அ.தி.மு.க.)
1984- அன்பழகன் (காங்கிரஸ்)
1989- கிருஷ்ணன் (அ.தி.மு.க.ஜெ.)
1991- கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
1996- கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
2001- செம்மலை (அ.தி.மு.க.)
2006- தமிழரசு (பா.ம.க.)
2011- கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
2016- வெற்றிவேல் (அ.தி.மு.க.)
Tags:    

Similar News